Friday, September 26, 2008

மானுடம்

சூனியத்திலிருந்து
பூச்சியத்தை நோக்கி---
வாழ்க்கைப் பயணம்.

எண்ணங்கள்
சிந்தனைகள்
கனவுகள்
கற்பனைகள்

உணர்வுகள்
உணர்ச்சிகள்
பார்வைகள்
ஸ்பரிசங்கள்

இச்சொற்களுக்கு
வரைவிலக்கணம்
தேடித் தேடியே
மானுடம்
தொலைந்து போனது

மானுடம் -
வார்த்தையல்ல
வரைவிலக்கணம் கூற

பாடம் அல்ல
பள்ளியில் படிக்க

சட்டம் அல்ல
அரசு கையில் எடுக்க

வியாபாரம் அல்ல
விற்று வாங்க

மானுடம் :-
ஒரு இசை -நீ மீட்ட வேண்டும்
ஒரு வாசனை - நீ நுகர வேண்டும்
ஒரு பூ - நீ ரசிக்க வேண்டும்
ஒரு ஆறு - நீ நீந்த வேண்டும்
ஒரு வானம் - நீ வியக்க வேண்டும்

எழுத முடியாத,
பேச முடியாத்,
செய்ய முடியாத -
உணரக் கூடியதுதான்
மானுடம் - வாழ்க்கை.







நான் யார்?

தடுமாறும்
ஒரு மரமா?
தவிக்கும்
ஒரு இலையா?
கய்ந்த
ஒரு சருகா?
வாடிய
ஒரு பூவா?
உடைந்த
ஒரு கிளையா?
நாளைய
அடுப்பில் விரகா?
ஆற்றில் மிதப்பா?
வீட்டில் கட்டிலா?

வேதனையின் விளிம்பில்
வெறுப்பின் உச்சத்தில்
தவறுகளின் பார்வையில்
நான் யார்?
நான் யார்?

வரவுகளின் தேவையில்
செலவுகளின் தேவையில்
உறவுகளின் தேவையில்
நரம்புகளின் தேவையில்
நான் யார்?
எனது நான் யார்?

மதங்களின் பார்வையில்
பிற மனிதர்களின் பார்வையில்
இனங்களின் பார்வையில்
மனங்களின் பார்வையில்
நான் யார்?

வித்தா ? பூவா? காயா?கனியா?மரமா? சருகா?
நானறியேன்.