Saturday, May 1, 2021

Saturday, January 9, 2010

Jealousy is comparison

Jealousy is comparison. And we have been taught to compare, we have been conditioned to compare, always compare. Somebody else has a better house, somebody else has a more beautiful body, somebody else has more money, somebody else has a more charismatic personality. Compare, go on comparing yourself with everybody else you pass by, and great jealousy will be the outcome; it is the by-product of the conditioning for comparison.

Otherwise, if you drop comparing, jealousy disappears. Then you simply know you are you, and you are nobody else, and there is no need. It is good that you don't compare yourself with trees, otherwise you will start feeling very jealous: why are you not green? And why has God been so hard on you -- and no flowers? It is better that you don't compare with birds, with rivers, with mountains; otherwise you will suffer. You only compare with human beings, because you have been conditioned to compare only with human beings; you don't compare with peacocks and with parrots. Otherwise, your jealousy would be more and more: you would be so burdened by jealousy that you would not be able to live at all.

Comparison is a very foolish attitude, because each person is unique and incomparable. Once this understanding settles in you, jealousy disappears. Each is unique and incomparable. You are just yourself: nobody has ever been like you, and nobody will ever be like you. And you need not be like anybody else, either.

God creates only originals; he does not believe in carbon copies.

A bunch of chickens were in the yard when a football flew over the fence and landed in their midst. A rooster waddled over, studied it, then said, "I'm not complaining, girls, but look at the work they are turning out next door."

Next door great things are happening: the grass is greener, the roses are rosier. Everybody seems to be so happy -- except yourself. You are continuously comparing. And the same is the case with the others, they are comparing too. Maybe they think the grass in your lawn is greener -- it always looks greener from the distance -- that you have a more beautiful wife.... You are tired, you cannot believe why you allowed yourself to be trapped by this woman, you don't know how to get rid of her -- and the neighbor may be jealous of you, that you have such a beautiful wife! And you may be jealous of him....

Everybody is jealous of everybody else. And out of jealousy we create such hell, and out of jealousy we become very mean.

If everybody is in misery, it feels good; if everybody is losing, it feels good. If everybody is happy and succeeding, it tastes very bitter.

But why does the idea of the other enter in your head in the first place? Again let me remind you: because you have not allowed your own juices to flow; you have not allowed your own blissfulness to grow, you have not allowed your own being to bloom. Hence you feel empty inside, and you look at each and everybody's outside because only the outside can be seen.

You know your inside, and you know the others' outside: that creates jealousy. They know your outside, and they know their inside: that creates jealousy. Nobody else knows your inside. There you know you are nothing, worthless. And the others on the outside look so smiling. Their smiles may be phony, but how can you know that they are phony? Maybe their hearts are also smiling. You know your smile is phony, because your heart is not smiling at all, it may be crying and weeping.

You know your interiority, and only you know it, nobody else. And you know everybody's exterior, and their exterior people have made beautiful. Exteriors are showpieces and they are very deceptive.
There is an ancient Sufi story:

A man was very much burdened by his suffering. He used to pray every day to God, "Why me? Everybody seems to be so happy, why am only I in such suffering?" One day, out of great desperation, he prayed to God, "You can give me anybody else's suffering and I am ready to accept it. But take mine, I cannot bear it any more."

That night he had a beautiful dream -- beautiful and very revealing. He had a dream that night that God appeared in the sky and he said to everybody, "Bring all your sufferings into the temple." Everybody was tired of his suffering -- in fact everybody has prayed some time or other, "I am ready to accept anybody else's suffering, but take mine away; this is too much, it is unbearable."

So everybody gathered his own sufferings into bags, and they reached the temple, and they were looking very happy; the day has come, their prayer has been heard. And this man also rushed to the temple.
And then God said, "Put your bags by the walls." All the bags were put by the walls, and then God declared: "Now you can choose. Anybody can take any bag."

And the most surprising thing was this: that this man who had been praying always, rushed towards his bag before anybody else could choose it! But he was in for a surprise, because everybody rushed to his own bag, and everybody was happy to choose it again. What was the matter? For the first time, everybody had seen others' miseries, others' sufferings -- their bags were as big, or even bigger!

And the second problem was, one had become accustomed to one's own sufferings. Now to choose somebody else's -- who knows what kind of sufferings will be inside the bag? Why bother? At least you are familiar with your own sufferings, and you have become accustomed to them, and they are tolerable. For so many years you have tolerated them -- why choose the unknown?

And everybody went home happy. Nothing had changed, they were bringing the same suffering back, but everybody was happy and smiling and joyous that he could get his own bag back.

In the morning he prayed to God and he said, "Thank you for the dream; I will never ask again. Whatsoever you have given me is good for me, must be good for me; that's why you have given it to me."

Because of jealousy you are in constant suffering; you become mean to others. And because of jealousy you start becoming phony, because you start pretending. You start pretending things that you don't have, you start pretending things which you CAN'T have, which are not natural to you. You become more and more artificial. Imitating others, competing with others, what else can you do? If somebody has something and you don't have it, and you don't have a natural possibility of having it, the only way is to have some cheap substitute for it.


Just look inside your bag and you will find so many artificial, phony, pseudo things -- for what? Why can't you be natural and spontaneous? -- because of jealousy.

The jealous man lives in hell. Drop comparing and jealousy disappears, meanness disappears, phoniness disappears. But you can drop it only if you start growing your inner treasures; there is no other way.
Grow up, become a more and more authentic individual. Love yourself and respect yourself the way God has made you, and then immediately the doors of heaven open for you. They were always open, you had simply not looked at them.

OSHO
from : The Book of Wisdom Ch. 27

Friday, January 1, 2010

நான் கடவுள்

நான் கடவுள்

சேது, நந்தா, பிதாமகன் போன்ற சிறந்த திரைப்படங்களை எமக்குத் தந்த பாலாவின் நான்காவது படைப்பு. பிதாமகன் திரைப்படம் வெளிவந்து ஏறத்தாழ ஐந்து ஆண்டுகளுக்குப் பின் வெளிவந்திருக்கும் பாலாவின் படம.; மூன்று வருட உழைப்பின் பின் தமிழ் ரசிகர்களுக்கு கிடைத்திருக்கிறது நான் கடவுள்.

தனது ஏனைய திரைப்படங்களைப் போலவே இத்திரைப்படத்திலும் தன் முத்திரையை பாலா பதிவு செய்திருக்கின்றார். மீண்டும் மரணத்தைக் கையிலெடுத்து வாழ்வாகக் காட்டி உறவுகளை கேள்விக்குறியாக்கியிருக்கின்றார்.

மனதின் விகாரங்களையும், வாழ்வின் அகோரங்களையும்;;, மரணத்தின் வாழ்வையும் தமிழில் இவ்வளவு அற்புதமாகக் கையாளக்கூடிய இயக்குநர் பாலாவாகத்தான் இருக்க முடியும்.

மரணம் - மனிதனின் தேடுதல் வேட்கையின் எல்லை. மனித நேயத்தையும், பிரபஞ்ச இருப்பையும், இயற்கையையும் இணைக்கும் பாலம். தன்னைத் தானே உணர்வதற்கான ஒரு சந்தர்ப்பம்.

தனது நான்கு திரைப்படங்களிலுமே மரணத்தை மையமாகக் கொண்ட பாலா யதார்த்தத்தை உணர்ந்துக் கொண்ட ஓரு யதார்த்தப்ப+ர்வமான இயக்குநர் எனக்கருதலாம்.

நான் கடவுளும் அவ்வாறே. மரணத்தைப் பற்றிய ஒரு பார்வை. அதை வரமாகவும், சாபமாகவும் காட்டும் முடிவு.

சேது

இத்திரைப்படத்தில் காதலிக்காக காதலனைப் பைத்தியமாக்கிய பாலா, காதலியை தற்கொலை (மரணம்) செய்வதுடன் படத்தை நிறுத்தி ‘வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா மார்பு துடிக்குதடி, காற்றில் கரைந்து விட்டாய் கண்ணம்மா கண்கள் கலங்குதடி’ என பாரதியின் கவி வரிகளை இளையராஜாவின் இசையிலும் குரலிலும் ஒலிக்கவிடுவதோடு முடித்திருப்பார். திரைப்படம் முடிந்;து வெளிவரும் நாம் கனத்த இதயத்துடனும்; வாழ்க்கை பற்றிய கேள்விக்குறியுடனும்;, மரணத்தைப் பற்றிய உணர்வுடனும்; படத்துடன் ஒன்றிவிடுகிறோம்.

நந்தா

தன் தாயின் கையாலேயே விஷமூட்டிய அன்னத்தை உண்பதனூடாக கொலை செய்து நாயகனின் ஜனனத்தையும், வாழ்க்கையையும் மரணத்தினூடாக நியாயப்படுத்தியிருப்பார் பாலா. படத்தைப் பார்த்துவிட்டு வெளியேறும் நாம் அதிலிருந்து விடுபடுவதற்கு தடுமாறுகின்றோம்.

தாய் சேய் உறவையே கேள்விக்குறியாக்கி மனித உறவின் விரிசல்களையும் வாழ்வின், மரணத்தின் மன ரீதியிலான உளைச்சல்களையும் வேதனைகளையும் அழகாகக் கோடிட்டுக் காட்டிய திரைப்படமாக நம்முள் இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது.

தாய் மூலமாக பிள்ளைக்கு பாலா தந்த மரணம் வரமா? இல்லாவிடில் சாபமா?

பிதாமகன்

சேது, நந்தா திரைப்படங்களின் மூலம் சாதாரண நடிகர்களாக இருந்த விக்ரமையும் சூர்யாவையும் சிறந்த நடிகர்களாக மாற்றி தமிழ் சினிமாவுக்குள் விடுபட்டுப் போயிருந்த யதார்த்தப+ர்வமான நடிப்புத்திறமையை வெளிக்கொண்டுவந்தது பாலாவின் சிறப்பு. இவ்விரு நடிகர்களையும் பிதாமகன் திரைப்படத்தில் இணைத்து மீண்டும் மரணத்தை மையமாக வைத்தே படத்தை அற்புதமாக நகர்த்தியிருந்தார்.




சுடுகாட்டில் ஆரம்பிக்கும் படம் இறுதியில் தன் நண்பனைக் கொல்பவனை பலி தீர்த்துக்கொள்வதன் மூலம் (விரட்டி விரட்டி அகோரமாக கொலை செய்வதுடன); படத்தை முடித்து, பின் இருக்கின்ற நட்பு ரீதியிலான உறவுகளையும் விடுத்துவிட்டு நாயகன் தன் வழியில் போக திரைப்படம் முடிவுக்கு வருகின்றது. உறவுகளை கேள்விக்குறியாக்கி மரணத்தை வாழ்வாக்கிய இன்னுமொரு பாலாவின் கைவண்ணம்தான் பிதாமகன்.


நான் கடவுள்

ஏனைய மூன்று திரைப்படங்களைப் போலவே நான் கடவுள் திரைப்படத்திலும் இறுதியாக வில்லனாகிய தாண்டவன் நாயகன் ருத்ரனால் கொலை செய்யப்படுகிறான.; பின் அம்சவல்லியையும் ருத்ரன் கொலை செய்கிறான். இவ்விரு மரணங்களையும் சாபமாகவும் வரமாகவும் நியாயப்படுத்தி திரைப்படத்தை நிறைவு செய்கிறார் இயக்குனர்.

ஒவ்வொரு மனிதனும் தான் ஜனனிக்கும்போதே மரணத்தையும் உடன் கொண்டு வருகின்றான். இந்த உண்மை லௌகீக வாழ்க்கையில் ஈடுபடும்போது (அவன் உருவாக்கி வைத்திருக்கும் அல்லது அவனை உருவாக்கியிருக்கும் சமுதாயச் சித்தாந்தங்களான மதங்கள், அரசியல், கல்வி முறைகள், சட்டதிட்டங்கள், பொருளாதாரம், சம்பிரதாயங்கள், மரபுகள், பணம், பதவி, ஏற்றத்தாழ்வுகள் போன்றவற்றால் செதுக்கப்படுகின்றன) மறக்கப்படுவதும் அதனால் அவன் தட்டுத்தடுமாறி தறிகெட்ட நிலையில் வாழ்வதும் தான் இன்றைய நிலை.

எனவே பாலா தனது ஒவ்வொரு படத்திலும் மன ரீதியான பாதிப்புக்க்ளையும், போராட்டங்களையும், பின் இதனால் உருவாகும் உறவுகளால் தனிமனிதன் சின்னாபின்னப்படுவதையும,; அதற்கு தண்டனையாக ஏதோ ஒரு ரீதியில் உடல் ரீதியிலான மரணத்தை வழங்கிவிட்டுச் செல்வதையும் காணலாம்.

ஒரு கோணத்தில் பார்த்தால் இவ்வாறான படங்களைத் தருவதன் மூலமாக தமிழ் ரசிகனின் ரசிப்புத் தன்மையை உயர்த்தியிருக்கிறார் பாலா. அதுமட்டுமல்லாமல் தனது கதையின் மூலமாக உருவாகும் அழுத்தமான கதாபாத்திரங்கள் மூலமாக சொல்லவரும் கருத்துக்களை தெளிவாக சொல்லும் வல்லமை பாலாவிற்குண்டு. அவர் தேர்வு செய்யும் கதைக் களங்களை சிறப்பாகக் கையாண்டு, நெறிப்படுத்தி தமிழ் சினிமாவாகத் தருவது ஒன்றும் படம் பார்ப்பது போல் எளிதான விடயமல்ல. கடுமையான உழைப்பின் பயனாக உருவாகும் இவ்வாறான திரைப்படங்கள் மூலமாக தமிழ் ரசிகனை ஒரு புதிய பார்வையாளனாக மாற்றுவதற்கு பாலா முயற்சி செய்கிறார்.

தான் எடுத்துக்கொண்ட கதைக்கருவை மையமாக வைத்து அதற்குத் தகுந்த கதாபாத்திரங்களை உருவாக்கி, பொருத்தமானவர்களை தேர்ந்தெடுத்து, தரமான இசையுடன் தரமான ஒலி, ஒளிப்பதிவுடன் அழகாக தமிழ் ரசிகனுக்குத் தருவதில் பாலா தனித்தன்மையுள்ள ஒரு திறமைசாலி.

இவ்வளவு விடயங்களையும் உன்னிப்பாகக் கவனித்து யாருடைய தலையீடும் இல்லாமல் எடுக்க நினைத்த கதையை திரைப்படமாக்கி காலதாமதமானாலும் கச்சிதமாக தமிழ் ரசிகனுக்கு சொல்லும் பாலா இன்றைய போட்டி நிறைந்த தமிழ் சினிமா உலகில் ஆளுமைமிக்க ஒரு இயக்குனர்.

ஒரு படைப்பாளியாக இத்தகைய ஆளுமைகளைத் தன்னகத்தே கொண்டு தன் படைப்புக்களை நமக்குத் தரும் பாலா ரசிகர்களாகிய எம் சுதந்திரத்தில் தலையிடுவதில்லை. எப்படி அவருக்குப் பிடித்த விதத்தில் படத்தை உருவாக்குகிறாறோ அப்படியே அதை நம் கையில் கொடுத்துவிட்டு பார்ப்பவர் எவ்வழியில் வேண்டுமானாலும் அதை எடுத்துக்கொள்ளட்டும் என்ற சுதந்திர உணர்வையும் கொடுத்து விடுகிறார்.


பொதுவாக தமிழ்த்திரைப்படங்கள் எல்லாம் பணத்தை மட்டுமே மையமாக வைத்து, தமிழ் ரசிகனை இழிவாகக் கருதி அவனது ரசனையை மதிக்கவோ உயர்த்தவோ முன்வராமல் அரைத்த மாவையே அரைக்கும் வகையான திரைப்படங்கள்தான் எடுக்கப்படுகின்றன. தன் திறமையை வைத்து தைரியமாகத் திரைப்படம் எடுக்கும் இயக்குனர்களோ தயாரிப்பாளர்ளோ மிகவும் அரிது. காலா காலமாக இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும்
பணம் சம்பாதிப்பதற்காக உருவாக்கி வைத்திருக்கும் ரசிகனை நம்பியே படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், பாலா இவ்வாறு உருவாக்கப்பட்ட ஜடமான ரசிகனை நம்பிப் படம் எடுக்காமல் தன் திறமை மீது முழு நம்பிக்கை வைத்து வழமையான கதைக் களங்களிலிருந்து விலகி தன் படங்களை உருவாக்குகிறார்.

இவ்வாறு தான் உருவாக்கும் படங்களை ரசிப்பதனூடாக தமிழ் ரசிகனின் ரசனை வளர வேண்டும் என எண்ணும் பாலா எம் கண்ணுக்கு பார்வையாக, உணர்வுகளுக்கு உணவாக, சிந்தனைக்கு வேலையாக, கற்பனைக்கு ஆச்சரியமாக திரைப்படத்தைக் கொடுத்து விட்டு ரசிகர்களை மரியாதையுடன் நோக்கும் ஒரு இயக்குனராகத்தான் தென்படுகிறார்.

தன் படைப்பை தன் திறமையை நம்பி எடுக்கும் இயக்குனர் அதை ரசிகனுக்குத் தருவதனூடாக தமிழ் ரசிகனை வலுவுள்ளவனாக சினிமாவை ஆழமாக உற்று நோக்குபவனாக மாற்றிவிடுகிறார். பொழுது போக்கு அம்சமாக மட்டும் அல்லாமல் அதையும் தாண்டி அவரது படங்களை ரசிப்பதற்கு எம்மால் முடிகிறது. ரசிகன் தன்னை உயர்த்திக் கொள்வதோடு ஒவ்வொரு காட்சியின் பின்னும் அடுத்து நடக்கப் போவதை அறிய முடியாதவனாக தேடுதல் வேட்கையுள்ளவனாகவும் மாற்றப்படுகிறான். தமிழ் சினிமாவிற்கு இது மிக ஆரோக்கியமான விடயம் ஏனெனில் காலா காலமாகவே தமிழ் ரசிகர்களை மடையர்களாகவே வளர்த்து வி;ட்டது தமிழ் சினிமா. அவனை அறிவாளியாக உணர்வுள்ளவனாக, திறமைசாலியாக மாறுபட்ட ரசனையுள்ளவனாக மாற்றுவதில் பாலா முன்னிலை வகிக்கிறார்.

‘தீயவன் - கெட்டவன் உருவாக்கப்படல்’

ஒரு தனி மனிதன் ஏன் தீயவனாக ஆக்கப்படுகிறான்? இன்றைய காலகட்டத்தில் பணம், பலம், காமம் போன்ற தேவைகள் மீது பேராசை கொள்ளும் எவனும் அவற்றை ப+ர்த்தி செய்து கொள்வதற்கு தவறான வழிகளைத் தேர்ந்தெடுக்கும் போது தீயவனாகிறான். இம்மனிதனானவன் சமுதாயக் கோட்பாடுகளால் உருவாக்கப்பட்டவனேயன்றி தன்னால் உருவாக்கப்பட்டவன் அல்ல.

உண்மையில் ‘நான் கடவுள்’ என்பதை உணரும் முன் ‘நான் யார்’? என்ற கேள்விக்கான உண்மையை ஒவ்வொருவரும் உணர வேண்டும். ஒவ்வொரு மனிதனும் இக்கேள்விக்கான விடையை தேட முனையும் போது இறுதியில் ‘நான் கடவுள்’ என்ற நிலையை அடையலாம்.

ருத்ரன் (பாலாவின் கடவுள்) காசியிலிருந்து உறவுகளை அறுத்தெறிவதற்காக தன் வீடு நோக்கி வர – பின் தாய், தந்தை, தமக்கை உறவுகளிலிருந்து விடுபடுகிறான்.

பொதுவாகவே தமிழ் கடவுள்கள் ஃ இந்து சமயக் கடவுள்கள் வன்முறை நிறைந்தவர்களாகவே காட்டப்படுகிறார்கள். பாலா உருவாக்கிய கடவுளும் அவ்வகையைச் சேர்ந்ததே. ருத்ரனால் தனியே தாண்டவம் ஆட முடிவதில்லை. தாண்டவன் (வில்லன்) இல்லாமல் ருத்ரன் (நாயகன்) இல்லை என்றாகிவிடுகின்றது. தமிழ் சினிமாவின் நாயகன், வில்லன் கருவிலேயே திரைப்படம் நகர்கிறது.

தாண்டவனை ஆரம்பம் முதலே பலம் பொருந்திய வில்லனாக உருவாக்கி (அரக்கனாக) கடவுளுக்கு (ருத்ரன்) நிகரான போட்டியாளனாக நிறுத்தி வழமைபோல் தீயவனை (தாண்டவன்) நல்லவன் (நாயகன்ஃருத்திரன்ஃகடவுள்) சண்டையிட்டு அழிப்பததனூடாக நல்லவன் கடவுளாக்கப்படுகின்றான்.



இப்படத்திற்கு ‘நான் கடவுள்’ எனப் பெயரிடாமல் ‘ருத்ரத் தாண்டவம்’ எனப் பெயரிட்டிருக்கலாம் அல்லது ருத்ரன் எனப் பெயரிட்டிருக்கலாம். அப்படியாயின் அது வழமையான தமிழ் சினிமாவாக எம்மால் எதிர்பார்க்கப்பட்டிருக்கும். நான் கடவுள் எனப் பெயர் வைத்ததன் மூலம் ரசிகனின் எதிர்பார்ப்பை திசைதிருப்பியிருக்கின்றார் பாலா.

தலைப்பின் அர்த்தத்தில் அல்லது உண்மையில் அவர் அவ்வளவு அக்கறை கொண்டவராகவோ தலைப்பை புரிந்துகொண்டவராகவோ தெரியவில்லை.

உண்மையில் ஒவ்வொரு மனிதனும் தன்னிடம் ‘நான் யார்’ என்ற தேடலில் ஈடுபடும்போது ‘நான் கடவுள்’ எனற உண்மையை உணரலாம். நான் கடவுள் என்றுணர ஆரம்பிக்கும்போது அவன் ‘நான் மட்டும் கடவுள்’ என்றுணர மாட்டான். எல்லாமே கடவுள், எல்லோருமே பிரபஞ்ச இருப்பின் அங்கம் என்ற இருத்தலின் மகிமையை உணர்ந்து கொள்வான். இந்த நிலையிலிருந்து பாலாவால் திரைப்படத்தை அணுக முடியாமை ஏமாற்றமளிக்கிறது. இதை புரிந்து கொள்ள இயக்குனருக்கு முடியாமல் போகின்றது.

தனது நான்காவது திரைப்படத்தை மூன்று வருடங்களாக உருவாக்கிய பாலா திரைப்படத்தை சிறப்பாக தருவதற்கு முயன்றாரா? இல்லை தமிழ் சினிமா ரசிகனை அதே கட்டத்தில் வைக்க முயன்றிருக்கிறாரா? என்பது என்னுள் எழும் முக்கியமான கேள்வியாகிறது.

தன்னால் கடந்த மூன்று திரைப்படங்களின் மூலமாக உருவாக்கப்பட்டஃகிடைத்த ரசிகர்களை இழக்க விரும்பாத பாலா தாண்டவன் என்ற வில்லனை உருவாக்கி அவனை அழிப்பதன் மூலமாக தனது நாயகனை (நான் மட்டும் கடவுள்) கடவுள் நிலைக்கு உயர்த்திவிடுகிறார். தமிழ் சினிமா ரசிகனின் அடிப்படைத் தேவையான வில்லனை அழிக்கும் தொழிலை செய்து ‘நான் கடவுள்’ என்ற பதத்தின் உண்மை நிலையை புறக்கணித்துவிட்டார் பாலா.


நான் கடவுள் (அஹம் பிரம்மாஸ்மி) என்று சொல்வதாலோ நல்லவன் யார்? கெட்டவன் யார் என்று தெரிந்து கொள்ள முடிவதாலோ, தீமை செய்யும் மனிதர்களை கொலை செய்வதாலோ ஒரு மனிதனை கடவுள் நிலைக்கு உயர்த்த முடியுமானால் அது அரசியல் - வியாபாரம். நாயகன் காசியிலிருந்து வந்தாலும், அவன் மூட நம்பிக்கையில் உதயமானாலும் அவனை மட்டுமே கடவுளாக்கியிருப்பது திரைப்படத்தின் தேவையே அன்றி உண்மை நிலையல்ல. தலைப்பை வைத்துவிட்டு கதை தேடப்பட்டிருக்கிறதோ என்றும் எண்ணத் தோன்றுகின்றது. நான் கடவுள் என்ற நிலை ஒவ்வொருவரும் தன்னுள் தேடி அடையவேண்டிய உண்மையும், இருப்பு நிலையுமாகும்.

இந்நிலையை தீமை செய்பவர்களைத் தண்டிப்பதற்காகவும் வாழ்வில் விரக்தியுற்று பாதிப்படையும் ஒரு குருட்டுப் பெண்ணுக்காகவும் அவர்களை கொலை செய்வதன் மூலமாகவும் அடைய முடியும் அல்லது ‘நான் கடவுள்’ என்றுணர்ந்த பின் இதையெல்லாம் செய்யலாம் என்று காட்டியிருப்பது, இன்னும் எமது சமுதாயத்தை அதே பழமையான மூட நம்பிக்கைகளில் திளைக்க வைத்து மரணத்திற்கு பயந்து சமுதாயக் கோட்பாடுகளுக்கமைய நல்லவர்களாக வாழ வைப்பதற்கான ஒரு முயற்சியாகத்தான் தோன்றுகிறது.

லௌகீகத்தையும் ஆன்மீகத்தையும் புரிந்துகொள்ளவோ, உணர்ந்து கொள்ளவோ முடியாமல் கடந்தகால, நிகழ்கால மனிதர்களால் உருவாக்கப்படும் அரசியல் சார்ந்த, மதங்கள் சார்ந்த மூட நம்பிக்கைகளுக்கு ஊட்டமாகவும் மேலும் மேலும் மனிதர்களை வளரவிடாமல் தடுப்பதற்கான முயற்சியாகவும்தான் கதைக்களத்தை நோக்க முடிகிறது.


நான் கடவுள் என்றுணர்ந்தவர்கள் ஏனைய உயிர்களையும், பிரபஞ்ச இருப்பு நிலையையும் கடவுள் நிலையிலேயே உணர்பவர்களாகவும், பார்ப்பவர்களாகவும் இருப்பர். காசியில் இருப்பதாலோ, தலைகீழாக ஆசனம் செய்வதாலோ, தன்னைக் கடவுளாகக் கருதி; கொள்ளும் யாரும் நான் கடவுள் என்று உரத்துச் சொல்வதாலும் மட்டுமே அதையுணர்ந்தவர்களாக இருக்க மாட்டார்கள். ருத்ரன் தன் குருவுக்கு கட்டுப்பட்ட ஒரு அடிமையாகக் காட்சி தருகிறான். நான் கடவுள் என்ற எண்ணத்தை அவனுள் குருவே புகுத்திவிடுகிறார்.

ருத்ரன் சிறுவனாக இருக்கும் பொழுது அவனை காசியில் விட்டுச் சென்ற தந்தை மனம் மாறி அவனை மீட்டுச் செல்ல வரும்போது குரு அவனை அவனது தந்தையுடன் அனுப்பி உறவுகளை அறுத்துவிட்டு வரச் சொல்கிறார். குருவின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு நடக்கும் ஒரு சிஷ்யனாகத்தான் ருத்ரன் காட்சி தருகிறான். இது வழமையான தமிழ்த் திரைப்படக் கதாபாத்திரமாகத்தான் தெரிகிறது. உதாரணத்திற்கு தளபதி திரைப்படத்தில் ரஜினிக்கு மம்முட்டி கொடுக்கும் தளபதி பட்டமும் பின் ரஜினி செய்யும் கொலைகளும் அவை இயக்குனர் மணிரத்தினத்தாலும் ரசிகர்களாலும் எப்படி நியாயப்படுத்தப்படுகிறதோ அதேபோல்தான் ருத்ரனது நான் கடவுள் பட்டமும் தாண்டவங்களும் நியாயப்படுத்தப்படுகின்றன.

நல்லவன் யார்? கெட்டவன் யார்? என்பதெல்லாம் மனிதனால் உருவாக்கப்பட்ட அரசியலால், மதங்களால், சட்டத்திட்டங்களால், சம்பிரதாயங்களால், உறவுகளால் வந்த எச்சங்கள். தீமை இன்றேல் நன்மை இல்லை. தீமை எவ்வளவு உக்கிரமாக இருக்கின்றதோ அந்த அளவிற்கு நன்மையும் உண்டு என்ற இருமைக் கோட்பாட்டிற்கு அமையவே திரைப்படம் நகர்த்தப்பட்டிருக்கிறது. தீமையை வளர்க்காமல் நன்மையை உருவாக்குவது இருமைக் கோட்பாட்டிற்கமைய கடினமான ஃ முடியாத காரியம். நன்மை மட்டுமே இருக்குமானால் நாம் உருவாக்கி வைத்திருக்கும் இவ்வகையான போலியான கடவுள் கோட்பாடுகளுக்கும், அரசியலுக்கும், மதங்களுக்கும் வேலையில்லாமல் போய்விடும்.

தனது முந்தைய திரைப்படங்களின் மூலமாக தான் உருவாக்கிய ரசிகர்களை தன்னுடன் நிலைத்திருக்கச் செய்வதற்கான பாலாவின் முயற்சிதான் நான் கடவுள். தான் உருவாக்கிய ரசிகனுக்காக படமெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தின் பிரதிபலிப்பு திரைப்படத்தில் தெரிகிறது. தன் திறமையை மட்டும் நம்பாமல் தன் ரசிகர் வட்டத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக செய்த முயற்சியால் ‘நான் கடவுள்’ தன்மையைப் பற்றி பாலா அலட்டிக்கொண்டதாகவோ உணர்ந்து கொண்டதாகவோ தெரியவில்லை.

ஒரு சாதாரண வழமையான பலம்பொருந்திய நாயகன், பலம்பொருந்திய வில்லனை (ர்நசழஃஏடைடயin) மையப்படுத்தி தான் கதை நகருகிறது. தன் நாயகனை கொலை செய்பவனாகக் காட்டி தீயவர்களை அழிப்பதால் அவனை மட்டுமே கடவுளாக்கியிருக்கிறார். இது உண்மைக் கடவுள் நிலையல்ல.

தாண்டவன் ஏன் அந்நிலைக்குள்ளானான்? எவ்வாறு ருத்ரன் அகோரியானானோ அதேபோல் தாண்டவனும் சமூகத்தின் போலி முறைகளின் பாதிப்பால் மட்டுமே தீயவனாகியிருக்க வேண்டும். எனவே கடவுள் நிலையில் தண்டனை தனிமனிதனுக்கு வழங்கப்பட முடியாது. அதன் ஆரம்ப நிலையிலேயே மாற்றம் தேவை. உடலை அழிப்பதன் மூலமாக தாண்டவனும் கடவுள் நிலைக்குத் தள்ளப்படுகிறானா? அவனுக்கு வழங்கப்பட்ட மரணமும் ஓர் வரமா? போன்ற கேள்விகள் எழுகின்றன.

உடல் ரீதியில் வலுவான நாயகனுக்கும், உடல் ரீதியில் வலுவான வில்லனுக்கும் இடையிலான யுத்தமாக திரைப்படம் தெரிகிறது. இவர்கள் இருவருமே மனோ ரீதியில் பாதிப்புற்றவர்களாகவும் சமுதாயத்திற்கு இடைய+று செய்பவர்களாகவும் காட்சி தருகிறார்கள்.



சமூகத்தில் மனிதனால் உருவாக்கப்பட்டிருக்கும் முறைகளை, நீதிகளை, வரையறைகளை, சட்டதிட்டங்களை கோட்பாடுகளை மீறி தாண்டவன் தன் அடிமைகளை கையாள்கிறான், தண்டிக்கிறான். படம் முழுவதும் அவன் தீயவனாகவே சித்தரிக்கப்படுகிறான். அவ்வாறாக உயர் நிலையில் பித்து பிடித்த ஒருவனை வேறொரு வழியில் பித்துப் பிடித்த ருத்ரனை வைத்து விரட்டி விரட்டி கொலை செய்வதனூடாக சாதாரண தமிழ் சினிமா ரசிகனை திருப்திப்படுத்தும் முயற்சியில் பாலா ஈடுபட்டிருக்கின்றார்.

நாயகன், வில்லன் கதாபாத்திரங்களை மையப்படுத்தி கதை சொல்லும் முறையை மீறி தமிழ் இயக்குநரால் திரைப்படம் எடுக்க முடியும் என்ற நம்பிக்கை இன்னும் சிக்கலாகிறது. இருமைக் கோட்பாட்டால் கட்டுண்டு, போட்டி மனப்பான்மையைத் தூண்டி, பலசாலியைத் தேர்ந்தெடுத்து வெற்றி பெறச் செய்யும் ஒரு மல்யுத்தமாக ருத்திரனும், தாண்டவனும் ஆடும் கூட்டுத் தாண்டவத்தைக் குறிப்பிடலாம். இக்கூட்டுத்தாண்டவத்தில் உதிரிகளாகவே ஏனைய கதாபாத்திரங்கள் அனைத்தும் பின்னப்பட்டு இயக்குநரால் செதுக்கப்பட்டு நியாயப்படுத்தப்பட்டிருக்கின்றன.

நான் கடவுள் என்பதன் உண்மையை பாலாவால் தமிழ் சினிமாவினூடாக சொல்வது கடினமாகியிருக்கிறது. மூன்று வருடங்கள் அல்ல, தன் கடவுள் தன்மையை உணராமல் இன்னும் எத்தனை வருடம் உழைத்தாலும் உண்மை கடவுள் நிலையை தமிழ் சினிமாவினூடாக படம் பிடித்துக் காட்டுவது முடியாத காரியமே. ஏனெனில் நான் கடவுள் என்பது தனிமனித உணர்வு. அதை இவ்வாறாக படமாக்கும் முயற்சியானது பார்க்கும் ரசிகனை கேள்விக்குறியாக்கிவிட்டுச் செல்கிறது. இவ்வாறாக நோக்கும் போது தன் நாயகனை கடவுளாக்கும், கடவுள் நிலைக்குத் தள்ளும் முயற்சியிலீடுபடும் இன்னுமொரு சராசரி தமிழ் இயக்குநராக பாலா மாறிவிட்டாரோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

நான் பாலாவின் ரசிகன். அவரது திரைப்படங்களை ஆவலுடன் எதிர்பார்ப்பவன். தமிழ் சினிமாவில் ஒரு இயக்குநரின் படைப்பாக பாலாவின் திரைப்படங்களை நான் பார்க்க ஆசைப்படுகின்றேன். சினிமாவை சினிமாவாக மட்டுமே பார்க்க வேண்டும். அன்றி அதனூடாக வேறு அனுபவங்களைப் பெற்று தன் கடவுள் நிலைவரை செல்ல முடியும் என்று நான் நினைக்கவில்லை. தமிழ் சினிமாவில் எத்தனையோ நாயகர்கள் எத்தனையோ வில்லன்களை கொன்றிருக்கிறார்கள். அதன் மூலம் போலியான கடவுள் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஆனால், சாதாரண தமிழ் ரசிகனை இன்னும் அந்த எதிர்பார்ப்பினூடாகவே வைத்திருப்பதும,; உருவாக்கும் தனிமனித நாயகர்களை வழிபடத் தூண்டுவதுமாகவே தமிழ் சினிமாவும் நம் வாழ்க்கையும் நகர்ந்து கொண்டிருக்கின்றது.

இரத்தத்தையும், உடல் ரீதியிலான குறைபாடுகளையும், தண்டனைகளையும,; அகோரங்களையும், மூட நம்பிக்கைகளையும், வெறித்தனங்களையும், வன்முறைகளையும் நம்பியே தமிழ் சினிமா உருவாக்கப்படுவதும், ஓடிக்கொண்டிருப்பதும் ஓர் அவல நிலை.

தமிழ் சினிமாவால் காலகாலமாக உருவாக்கப்பட்ட ரசிகனின் தேவைக்கேற்ப ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒரு நாயகனை உருவாக்கி பின் அவனை கடவுள் நிலைக்குத் தள்ளி ரசிகனை உண்மையில் வளர விடாமல் அவனது போலி நம்பிக்கையில் அவனை நிறுத்தி வைத்து பணம் சம்பாதிப்பதற்குத்தான் எல்லா சினிமா இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் முயல்கிறார்கள். பண ரீதியிலான வசூலை அடிப்படையாக வைத்து தங்களது திரைப்படங்களை வெற்றி பெற்ற திரைப்படங்களாக போலியாக விளம்பரம் செய்கிறார்கள்.

பாலாவால் உருவாக்கப்பட்ட (அவரது முந்தைய படங்களினூடாக) ரசிகர்களின் தேவையைப் ப+ர்த்தி செய்ய பாலா கையிலெடுத்த அகோரி சந்நியாசியும,; தாண்டவன் என்ற வில்லனும் திரைப்படத்தை ஊடறுத்துச் செல்லும் அம்சவள்ளி மற்றும் ஏனைய பிச்சைக்காரர்களதும், ஊனமுற்றோரதும் அவல வாழ்க்கையும், பின்னணியும் அவர்களது உடல், உள ரீதியான வேதனைகளும் திரையில் காட்டப்படும்போது கதை வலுப்பெற்று அந்த ரசிகனையும் ஊடறுத்துச் செல்கிறது. அவனது தேவை ப+ர்த்தி செய்யப்பட்டதா என்பது கேள்விக்குறியான விடயம். சினிமாவிலும் சரி நம் நிஜ வாழ்விலும் சரி குருடர்களையும், அனாதைகளையும,; ஊனமுற்றோரையும், பைத்தியக்காரர்களையும் நிறையவே பார்த்திருக்கிறோம்.


தனி மனிதனின் ஈகோவை (நுபழ) அமைதிப்படுத்தும் அல்லது தற்காலிகமாகவேனும் திருப்திப்படுத்தும் ஒரு காரியமாக செய்கின்ற பாவங்கள் மன்னிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகளோடு நாம் இவ்வாறான மனிதர்களுக்கு உதவி என்ற காரியத்தை செய்கின்றோம். தன் மன ரீதியிலான பண ரீதியிலான வாழ்வை எண்ணி இவ்வாறு ஊனமுற்றோரையும், அனாதைகளையும், பைத்தியக்காரர்களையும் எம்மோடு ஒப்பிட்டுப் பார்ப்பதனூடாக தன்னிலையை எண்ணி திருப்திப்பட்டுக் கொள்ளும,; நியாயப்படுத்திக் கொள்ளும் மனக்கூட்டங்களே நாம்.

இவ்வாறாக இல்லாதவர்களுக்கும், இயலாதவர்களுக்கும் பணம், உணவு, உடை, உறையுள் போன்ற தேவைகளை வழங்குவதனூடாக பணம் படைத்தவர்கள் (அளவு வேறுபாடின்றி) தருமம் செய்வதாக எண்ணி திருப்தி கொள்கிறார்கள். தருமம் தலைகாக்கும் என்ற சமுதாயக் கருத்து மத ரீதியாக மனிதனின் மனதை சந்தோஷப்படுத்துவதற்காக உருவானவொன்று. இவர்களுக்கு பிச்சையிடுவதன் மூலம் மனித மனம் திருப்திப்பட்டுக் கொள்கிறது. கடவுள் என்பவர் தன்னை நல்ல நிலையில் வைத்திருப்பதாக எண்ணி உதவி செய்பவன் திருப்திப் பட்டுக் கொள்கிறான். இந்த உதவியானது யாரைப் போய்ச் சேர்கின்றது என்பதை இப்படத்தைப் பார்ப்பதனூடாக சற்று தெளிவாக புரிந்து கொள்வதோடு நம் எண்ணங்களிலும் சற்று தெளிவை ஏற்படுத்திக் கொள்ளலாம்.



யார் இந்த கடவுள்’

மனித மனம் உருவாக்கி வைத்திருக்கும் “கடவுள் யார்”? இந்தக் கேள்விக்கான விடையை தேடுவதற்காக பாலாவின் நான் கடவுள் திரைப்படத்தைப் பார்க்கப் போனால் அக்கடவுளை தரிசிப்பதற்கான ஒரு வாய்ப்பாக இது அமையலாம். தீயவர்களை அடையாளம் கண்டு அழிப்பதனூடாக ருத்ரன் பாலாவால்; கடவுள் நிலைக்குயர்த்தப்படுகிறான். அதை சாதாரண தமிழ் சினிமா ரசிகனால் ஏற்றுக்கொள்ளவும் முடியும். எனவே காலகாலமாக தீயதை அழிக்கவும் நல்லதை காக்கவும் உருவாக்கப்படும் மனிதர்களை எம் சமுதாயம் கடவுள் என்று வர்ணிப்பது இது முதல் தடவையல்ல. எப்பொழுதெல்லாம் தீமை வளர்ந்து அநீதி தலைதூக்கி அதர்மம் ஜெயிக்கிறதோ அப்போது நான் வருவேன் என்ற பழங்கூற்றிற்கேற்ப மனித மனோநிலையை திருப்திப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட இன்னொரு கடவுள் கதாபாத்திரமாகத்தான் ருத்திரனைப் பார்க்க முடிகிறது.

மூன்று வருட உழைப்பு இரண்டரை மணித்தியாலத்துக்குள் கொண்டு வரப்படடு ஒரு தமிழ் சினிமாவாக செதுக்கப்பட்டு உருவாக்கப்பட்ட தமிழ் ரசிகனின் தேவையை பூர்த்தி செய்வதோடு, வாழ்க்கையின் நிகழ்கால அவலங்களையும் காட்டிவிட்டு செல்லும் பாலா நம்முள்ளே பல கேள்விக்கணைகளை தொடுத்துவிட்டுச் செல்கிறார். தன் படைப்பில் அவர் உறுதியாகவே உள்ளார். தன் ரசனைக்கேற்ப திரைப்படத்தை பார்க்கும், ரசிக்கும் அனுமதி ரசிகனுக்குண்டு. உருவாக்கிய ரசிகர் வட்டத்திற்கு திருப்தியளித்து தன்னுடன் பாலா தக்கவைத்துக்கொண்டிருக்கிறார் என்று சொல்லலாம். மீண்டும் ஒரு பாலா படம் பார்க்கும் ஆவலுடன் என்னுள் வாழும் ரசிகன் காத்திருக்கிறான்.

ருத்ரனை ஒரு நாயகனாக (ர்நசழ) பார்க்காமல் திரைப்படத்தின் இன்னுமொரு கதாபாத்திரமாக மட்டும் பார்க்கச் சொல்லும் பாலாவின் கூற்று நியாயப்படுத்த முடியாததாக தெரிகிறது. நான் கடவுள் என்ற பெயரை வைத்துவிட்டு படம் காட்டும் பாலா மூன்று வருட உழைப்பின் பின் ருத்ரனை இன்னுமொரு கதாபாத்திரமாக மட்டும் அறிமுகப்படுத்த நினைப்பது ஏன்?

லௌகீக ரீதியாக அகோரி சந்நியாசிகளினதும், பிச்சைக்காரர்களினதும், ஊனமுற்றோரதும் வாழ்வின் ஆழத்திற்கு செல்ல முடிந்திருந்தாலும் ‘நான் கடவுள்’ என்ற ஆன்மீக ரீதியான உண்மைத் தேடலுக்கான ஒரு படமாக பாலாவால் திரைப்படத்தை உருவாக்க முடியாது போனமை பாலாவினதும், படத்தினதும் தோல்வி.



தான் உருவாக்கிய கதாபாத்திரங்களை நம்முள் உளவவிட்டுவிட்டு பாலா இயக்குநர் என்ற ரீதியில் ஓய்வெடுத்துக்கொள்கிறார். தன் நாயகனை ஒரு ர்நசழ வாக அங்கீகரிக்காமல் இன்னுமொரு கதாபாத்திரமாக ரசிகர்களை பார்க்கச் சொல்வது ஏன். தமிழ் சினிமாவில் தான் ஒரு வித்தியாசமான இயக்குநர் என உருவாக்கியிருக்கும் மாய பிம்பத்தை உடைக்க விரும்பாமையா? தானே நாயகன் என்ற எண்ணமா? தெரியவில்லை.

ரசிகர்களாகிய நாம் இயக்குநர் உருவாக்குகின்ற திரைப்படத்தை பார்த்துவிட்டு எம் கருத்துக்களையும், உணர்வுகளையும் சொல்வதும், விமர்சிப்பதும் இலகுவாக இருக்கலாம். பாலாவின் திரைப்படத்தை விமர்சன ரீதியான வார்த்தைகளுக்குள் அடக்குவது கடினமாகத்தான் இருக்கின்றது. இதற்கு என்ன காரணம்? பாலா தேர்ந்தெடுக்கும் கதைக்களங்களா? அல்லது அவர் தான் நினைத்த விதத்தில் தன் திறமையினூடாக தன் பாணியிலும், மொழியிலும் (சினிமா மொழி) சரியாக சொல்லிவிடுவதுதான் காரணமா? அல்லது அவர் தேர்ந்தெடுக்கும் தொழிநுட்பவியலாளர்கள் இசையமைப்பாளர், நடிக நடிகையர் மற்றும் இதர சகல திரைப்பட உருவாக்கம் சம்பந்தப்பட்ட விடயங்களா? இதற்கு ஒவ்வொரு ரசிகனும் விடைகாண வேண்டும். என்னைப் பொறுத்தவரை எல்லாக் காரணிகளுமே தாக்கம் செலுத்துகின்றன.

எது எவ்வாறாயினும் இன்னுமொரு சாதாரண தமிழ்த் திரைப்படத்தை பார்க்கப்போகும் தமிழ் ரசிகனாக பாலாவின் படத்தை பார்க்க புறப்பட முடியவில்லை. பாலா படம் பார்க்கப் போகிறோம் என்ற எண்ணம் அவர் ஏதாவது வித்தியாசமாக, சிறப்பாக செய்திருப்பார் என்ற எதிர்பார்ப்பு, பாலாவின் ரசிகன் எனற் ரீதியில் எனக்குள் ஏற்படுகிறது.; அங்கு சென்றால வழமைப் போல் பாலா தன் பாணியில் அடுத்தது என்ன? என்ற எதிர்பார்ப்போடு படத்தை நகர்த்துகிறார். தாண்டவன் அறிமுகப்படுத்தப்படும்போது இறுதியில் அவன் ருத்ரனால் கொல்லப்படுவான் என்பது புரிந்துவிடுகிறது. அவன் மரணத்திற்காக என் ரசிகனும்; காத்திருந்தான்.

திரையரங்கில் படத்தைப் பார்க்கும்போது எல்லாக் கதாபாத்திரங்களுமே நம்மை ஊடறுத்துச் செல்வதை அவதானிக்க முடிகிறது. ருத்ரன், தாண்டவன், அம்சவள்ளி, முருகன், ஏனைய பிச்சைக்காரர்கள், ஊனமுற்றோர் என ஒவ்வொரு முகமும் ஆழமாக பதிந்துவிடுகின்றது. எல்லாக் கதாபாத்திரங்களாகவும் நாம் மாறுவதும் உணரக்கூடியதாகவுள்ளது.


காசியில் எரியும் பிணங்கள் கூட எம் வாழ்வை சற்று நோக்கி நாமே கட்டையில் எரிவதைப்போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

நம்முள் வாழும் தாண்டவனைக் கொல்லும் அதேவேளை அங்கே வாழும் அம்சவள்ளியையும் கொலை செய்ய வேண்டி வருகின்றது. வாழ்க்கை - விரக்தியின் உச்சியில் ‘போதுமடா சாமி’ என்ற நிலைக்குத் தள்ளப்படும்போது மரணம் விடியலாகத் தென்படுகிறது. அத்துடன் அம்மரணம் வரமாகவும் உணரப்படுகின்றது. திரைப்படத்தில் ஏனைய கதாபாத்திரங்களும் மரணத்தை நோக்கி நகர்வதாகவேயுள்ளது சிறப்பம்சம்.

மரணத்தை மனிதன் தவிர்ப்பதற்காகவே வாழ்க்கை ஓடிக்கொண்டிருப்பது போலிருந்தாலும் மரணமானது ஒவ்வொரு நொடியும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. மரணத்துடனேயே வாழ்ந்து கொண்டிருப்பதால் மரணத்தைப் பிரித்து வாழ்வைத் தேடவோ தெரிந்து கொள்ளவோ முடியவில்லை.

மரணத்தை வேதனையாக, சாபமாக நினைத்து வாழ்வதற்குத் தான் நாம் நம் சமுதாயக் கோட்பாடுகளினால் பழக்கப்பட்டிருக்கிறோம். மரணத்தை வரமாக அளிப்பதற்கும,; அதை தேவை என உணர்வதற்கும் வாழ்க்கையானது வளர்;க்கப்பட்ட கோட்பாடுகளின்படி இல்லாமை, இயலாமை, வேதனை, விரக்தி, சோகம், ஊனம,; சித்திரவதை இவ்றறின் விழிம்பில்தான் அம்சவள்ளி போன்றோருக்குத் தேவைப்படுகின்றது.

உண்மையில் மரணம் என்பது வரமோ சாபமோ அல்ல அதுதான் வாழ்க்கை – மறுக்கவோ, மறைக்கவோ முடியாத உண்மை.


மரணத்தின் பின் என்ன என்ற கேள்வி இன்னும் கேள்விக்குறியாகத்தானிருக்கின்றது. ஆனால், மரணமும் வாழ்க்கையும் ஒன்றோடு ஒன்று தொடர்புப்பட்டவை. மரணமே வாழ்க்கை என்பதை புரிந்துணர்ந்து கொள்வதற்கு நம் வாழ்க்கை முறைகள் தடைகற்களாகத் தெரிகின்றது. உடலை அழிப்பதனூடாக அரசியல், ஆன்மீக ரீதியான தலைவர்கள் கடவுளாக்கப்படுவது தொன்றுதொட்டு இன்றுவரை நடந்து வருகிறது.

இயற்கையை எதிர்த்து வாழ்க்கை முறை தொடர்வதால்தான் மரணம் என்பது ஒரு சங்கடமான சடங்காகிவிட்டது. கடந்த கால எண்ணங்களின் கூட்டாகவும், எதிர்கால எண்ணங்களின் கனவாகவுமே வாழ்க்கை புணையப்பட்டிருக்கிறது. நிகழ்காலத்தில் வாழ்ந்து ‘நான் கடவுள்’ என்ற ஒன்றுமில்லாத் தன்மையை உணர்ந்து கொள்வதற்கோ, ஒவ்வொரு மனிதனும் தன் இருப்பை (கடவுள் தன்மை) தெரிந்து கொள்வதற்கோ வாய்ப்புகளை இன்றைய லௌகீக வாழ்க்கைக் கட்டமைப்பால் வழங்க முடியாமல் போய்விட்டதுதான் வேடிக்கை.

சமுதாயக் கட்டமைப்பால் போதிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட கடவுள் தன்மையைப் பற்றிதான் பாலாவால் படத்தில் சொல்ல முடிந்திருக்கின்றது. நம் உண்மையான கடவுளை படம் பார்த்துவிட்டு நம்முள்தான் தேட ணே;டியிருக்கின்றது. ஒரு இயக்குநராக பாலாவால் படத்தைதான் காட்ட முடிந்திருக்கிறது. மாறாக தலைப்பிலிருக்கும் கடவுளைக் காட்ட முடியவில்லை கடவுளைத்தேடி நீங்கள் படத்தைப் பார்த்தால் கிடைக்காது. கடவுளைப் பற்றிய சில பொதுவான கருத்துக்களும் மதங்களுக்கு எதிரான சில மாற்றுக் கருத்துக்களும் கிடைக்கும் என்பது உண்மை.

ஒரு படமாக பாலா ‘நான் கடவுள்’ படத்தை அழகாக தன் கட்டுப்பாட்டிற்குள் செதுக்கியிருக்கின்றார். அவரைப்பொறுத்தவரை அது ஒரு வெற்றி. கதாபாத்திரங்கள் மிக அருமையாக படைக்கப்பட்டிருக்கின்றன. நல்ல சினிமாவை வர்த்தக முலாமிட்டு காட்டுவதற்காக நாயகனை கடவுள் நிலைக்கு கொண்டு சென்று தண்டிக்கும் அதிகாரத்தையும் பின் மரணத்தை வரமாக அளிக்கும் அதிகாரத்தையும் வழங்கி சாதாரண தமிழ் ரசிகனின் தேவையையும் பாலா ப+ர்த்தி செய்திருக்கிறார்.

இத்திரைப்படத்தில் கதை, திரைக்கதை, காட்சியமைப்பு. இசை, ஒளிப்பதிவு எல்லாம் உயர்மட்டத்திலானவை என்பதை மறுக்க முடியாது.

நடிகர்கள், நடிகைகள் புதியவர்கள், பழையவர்கள் எல்லோருமே தத்தம் பாத்திரங்களில் அற்புதமாக வாழ்ந்திருக்கிறார்கள். இயக்குனரால் மெருகேற்றப்பட்டிருக்கிறார்கள்.

ஆர்யாவின் நடிப்பும் ஈடுபாடும் உண்மையில் பாராட்டப்பட வேண்டிய ஒரு அம்சம்.

ப+ஜாவின் நடிப்பும், பாத்திரப்படைப்பும் அருமை. அவருக்கான மேக்கப் சிறப்பு. முகபாவங்களும் சின்னச்சின்ன உணர்வுகளும், அசைவுகளும் அழகாக அவரால் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. தன் கதாபாத்திரத்தில் அற்புதமாக வாழ்ந்திருக்கிறார்.

தாண்டவன் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் உண்மையில் அந்தக் கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார் என்று சொல்லலாம். இவரைக் கண்டுபிடித்த பாலாவிற்கு நன்றி. அவரது நடிப்புக்கு எம் கரகோஷங்கள்.

பிச்சைக்காரர்கள் ஃ ஊனமுற்றோர்.

பாலாவின்; கண்டுபிடிப்புகள், புதுமுகங்கள். உண்மையிலேயே ஊனமுற்றவர்களை அவர்களாகவே கமரா முன் நடிக்க வைத்திருக்கிறார் பாலா. அதை நடிப்பாக பார்க்கமுடியவில்லை. யதார்த்தமாக நாம் சந்திக்கும் மனிதர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள் எனலாம்.

சிறந்த புதுமுக நடிக நடிகையருக்கான விருதுகளை இவர்கள் எல்லோருக்கும் வழங்கி கௌரவிக்கலாம் போல் எனக்குத் தோன்றுகிறது.


மீண்டும் இவர்களை திரையில் பார்ப்பதற்கான வாய்ப்புகள் மிக மிக அரிதாகவே தென்படுகின்றன. மீண்டும் இவ்வாறான கதாபாத்திரங்களை திரையில் வாழவைப்பது தமிழ் சினிமாவுக்கு கடினமானதாக விருப்பமில்லாதவொரு விடயமாகவே அமையலாம்.

திரையில் தம் யதார்த்த நிலையை நடிப்பாகக் காட்டி வாழ்ந்து கதைக்கு வலுவாக இருந்த இவர்கள் அனைவருக்கும் நாம் நமது நன்றிகளை தெரிவிப்போம். இவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக ஒரே திரைப்படத்தில் எம்முன் நிறுத்தி எம் இதயத்தையும் வயிற்றையும் கேள்வி கேட்கவைத்த பாலாவுக்கு நன்றிகள.; அவரது துணிச்சலுக்கு எமது பாராட்டுக்கள்.

இளையராஜாவின் பின்னணி இசை எம்மை படத்தின் காட்சிகளுடன் ஐக்கியப்படுத்திவிடுகின்றது.

அதேபோல் ஆதர்வில்சனின் கமரா காட்சிகளையும், கதாபாத்திரங்களையும் அற்புதமாக பின்னிப்பிணைய வைத்திருக்கிறது.

இவை எல்லாவற்றையும் உருவாக்கிக் கொடுத்த பாலாவின் இயக்கம் சிறப்பு. பாலா, உங்கள் அடுத்த திரைப்படத்தை பார்ப்பதற்கான எதிர்பார்ப்பும் ஏக்கமும் அதிகம். இன்னும் சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கையில் காத்திருப்பு.

‘நான் கடவுள்’ உங்களில் தேடுங்கள்.
நான் ‘மட்டும்’ கடவுள் பாலாவின் படத்தை பாருங்கள்.

இறைவனுக்கு நன்றியுடன்

சக்திவேல் பாலரமேஸ்
கொழும்பு, இலங்கை
24.02.2009

Friday, September 26, 2008

மானுடம்

சூனியத்திலிருந்து
பூச்சியத்தை நோக்கி---
வாழ்க்கைப் பயணம்.

எண்ணங்கள்
சிந்தனைகள்
கனவுகள்
கற்பனைகள்

உணர்வுகள்
உணர்ச்சிகள்
பார்வைகள்
ஸ்பரிசங்கள்

இச்சொற்களுக்கு
வரைவிலக்கணம்
தேடித் தேடியே
மானுடம்
தொலைந்து போனது

மானுடம் -
வார்த்தையல்ல
வரைவிலக்கணம் கூற

பாடம் அல்ல
பள்ளியில் படிக்க

சட்டம் அல்ல
அரசு கையில் எடுக்க

வியாபாரம் அல்ல
விற்று வாங்க

மானுடம் :-
ஒரு இசை -நீ மீட்ட வேண்டும்
ஒரு வாசனை - நீ நுகர வேண்டும்
ஒரு பூ - நீ ரசிக்க வேண்டும்
ஒரு ஆறு - நீ நீந்த வேண்டும்
ஒரு வானம் - நீ வியக்க வேண்டும்

எழுத முடியாத,
பேச முடியாத்,
செய்ய முடியாத -
உணரக் கூடியதுதான்
மானுடம் - வாழ்க்கை.







நான் யார்?

தடுமாறும்
ஒரு மரமா?
தவிக்கும்
ஒரு இலையா?
கய்ந்த
ஒரு சருகா?
வாடிய
ஒரு பூவா?
உடைந்த
ஒரு கிளையா?
நாளைய
அடுப்பில் விரகா?
ஆற்றில் மிதப்பா?
வீட்டில் கட்டிலா?

வேதனையின் விளிம்பில்
வெறுப்பின் உச்சத்தில்
தவறுகளின் பார்வையில்
நான் யார்?
நான் யார்?

வரவுகளின் தேவையில்
செலவுகளின் தேவையில்
உறவுகளின் தேவையில்
நரம்புகளின் தேவையில்
நான் யார்?
எனது நான் யார்?

மதங்களின் பார்வையில்
பிற மனிதர்களின் பார்வையில்
இனங்களின் பார்வையில்
மனங்களின் பார்வையில்
நான் யார்?

வித்தா ? பூவா? காயா?கனியா?மரமா? சருகா?
நானறியேன்.

Friday, May 16, 2008

பிரபஞ்சம்

தூசுகள்.....
துகள்கள்...
எனக்கும்...
உனக்கும்....
அறுந்துபோன...
அந்த தொடர்பு....
முதல் முயற்சி......
ஏனைய...
துகல்களுடனன
ஸ்பரிசம்....
வெற்று வெளியா?
காற்று வெளியா ?
சூனியமா?